உதயநிதிக்கு நன்றி சொன்ன லவ் டுடே இயக்குநர் பிரதீப்!

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான “லவ் டுடே” திரைப்படம் பெரும் வெற்றிபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் அந்தப் படம் சொல்லிய கருத்தைப் பற்றிய பேச்சாக இருக்கிறது.

காலத்திற்கேற்ற படம் என்று அனைவரும் பாராட்டுகிறார்கள். 2கே கிட்ஸ் எனப்படும் இளம் தலைமுறையினர் இந்தப் படத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினை ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நேரில் சந்தித்து நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி உள்பட நிர்வாகிகள் சிலரும் இருந்தனர்.

You might also like