74 நாட்களில் 10,000 வழக்குகளுக்குத் தீர்வு!

– உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் ஓய்வு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்று ஓய்வுபெறுகிறார். இதையொட்டி உச்சநீதிமன்றத்தில் உபசார விழா நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், “உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்பை, மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட்டிடம் ஒப்படைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

மும்பை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்தபோது அவருடைய தந்தையான உச்சநீதிமன்றத்தின் 16-வது தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் முதன்முதலில் முறையிட்டது நினைவுக்கு வருகிறது.

37 ஆண்டுகள் வாழ்க்கைப் பயணத்தை இந்த உச்சநீதிமன்றத்தில் கழித்துள்ளேன். எனது பதவி காலத்தில் ஒரே நேரத்தில் மூன்று அரசியல் சாசன அமர்வு செயல்பட்டது மகிழ்ச்சியான மறக்க முடியாத நிகழ்வாகும்.

என்னால் இயன்றதை வழக்கறிஞர்களுக்கு செய்து உள்ளேன் என்ற திருப்தியுடன் விடைபெறுகிறேன் என தெரிவித்தார்.

மாலையில் வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் நடந்த பிரிவுபசார விழாவில் பேசிய யு.யு.லலித், “எனது 74 நாட்கள் பதவிக்காலத்தில் 10 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு கண்டுள்ளேன். 6 அரசியல் சாசன அமர்வுகளை அமைத்துள்ளேன். எனது பணி மனநிறைவை தந்துள்ளது” என தெரிவித்தார். 

You might also like