இந்தியன் 2 படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் அப்பா!

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது. கொரோனா மற்றும் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு படத்தின் பிரச்னையை சுமூகமாக முடித்து வைத்துள்ளார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்துவருகிறது.

இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ், இந்தியன் 2 படத்தில் நடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

யோக்ராஜ் ஏற்கனவே பாலிவுட்டில் பல படங்கள் நடித்தவர். இப்போது முதல்முறையாக தமிழில் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

யுவராஜ் சிங்கின் தந்தை எதுவாக இருந்தாலும் துணிச்சலாக பேசக்கூடியவர். ஒருமுறை தன் மகன் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டபோது, அதற்கு காரணம் கேப்டன் தோனி தான் என யோக்ராஜ் குற்றம்சாட்டினார். அது அப்போது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

வெளிப்படையாகப் பேசும் யோக்ராஜ், இந்தியன் 2 படப்பிடிப்புக்காக மேக்கப் போடும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏனென்றால் கமல் பிக் பாஸ், மற்ற பட வேலைகளில் பரபரப்பாக இருப்பதால், சேனாதிபதி கதாபாத்திரத்தில் கமலுக்கு டூப்பாக அவர் நடிக்கிறார் என்று சொல்கிறார்கள். மேக்கப் போடும் புகைப்படத்துடன் கமலுடன் நடிப்பதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.

You might also like