ஒரு மொழி பக்குவமடைய முதிர்ச்சி ஒரு தகுதி. அடுத்த தகுதி தொடர்ச்சி.
கிரேக்கம், லத்தீன், சமஸ்க்ருதம் போன்றவையும் செம்மொழியாக கருதப்படுகின்றன. கிரேக்க மகா காவியமான இலியட் நவீன கிரேக்கர்களுக்குச் சுத்தமாகப் புரியாது.
எந்த மொழியிலாளர்களும் மற்றொரு மொழியை இழிவாக புறந்தள்ள மாட்டார்கள். லத்தீனும் சமஸ்க்ருதமும் மொழியியலாளர்களுக்கு மட்டுமே புரியும்.
இம்மொழிகள் வழக்கொழிந்து தம் அன்றாடத் தன்மையை இழந்துவிட்டன. தமிழ் அப்படியில்லை! 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சங்கப்பாடல்களை நாம் இப்பொழுது படித்தாலும் முழுமையாக இல்லாவிடினும் ஏறக்குறைய புரிகிறது…!
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல்
கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
இந்தப் புறநானூற்றுப் பாடலில் ஓரிரு வார்த்தைகளை நகூனப்படுத்திவிட்டால் அது இன்றைய தமிழாகிவிடும்.
மற்றபடி 2000 ஆண்டுகள் கடந்து முடிந்தாலும் ஓரளவுக்கு புரிந்து கொள்ளக்கூடிய மரபுத் தொடர்ச்சி தமிழுக்கு உள்ளது.
சுருக்கமாகச் சொன்னால் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழனும் இன்றைய தமிழனும் சந்தித்துக் கொண்டால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசுவது புரியும். இச்சிறப்பு உலகில் வெறெந்த மொழிகளுக்கும் இல்லை!
– எழுத்தாளர் சுஜாதா