காஷ்மீருக்கு 1.62 கோடி சுற்றுலா பயணிகள் வருகை!

ஜனவரி 2022 முதல் தற்போது வரை ஜம்மு காஷ்மீருக்கு 1 கோடியே 62 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக ஜம்மு காஷ்மீரின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 2022 முதல் தற்போது வரை ஜம்மு காஷ்மீருக்கு 1 கோடியே 62 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இந்த ஆண்டு தான் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்துள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

அதன்பின், கடந்த ஆண்டு கணிசமாகக் கூடிய இந்த எண்ணிக்கை தற்போது 1.62 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

You might also like