18 மாநிலங்களில் 105 இடங்களில் ரெய்டு
நாட்டில் இணைய வழியிலான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரித்து வருகிறது. போலி கால்சென்டர் மூலமாக இணைய வழியில் பண மோசடி, தகவல் திருட்டு உள்பட பல குற்றங்களால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், சைபர் குற்றங்கள் தொடர்பாக ‘ஆப்ரேஷன் சக்ரா’ என்ற பெயரில் சிபிஐ அக்டோபர் 4 முதல் பல்வேறு மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
சிபிஐ அதிகாரிகள் தலைமையில், சர்வதேச காவல் அமைப்பான இன்டர்போல், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலிய காவலர் இணைந்து 18 மாநிலங்களில் 105 இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.
இதுவரை 87 இடங்களில் சோதனை நிறைவுப் பெற்றதாகவும், அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 4 இடங்களும், டெல்லியில் 5 இடங்களும், சண்டிகரில் 3 இடங்களும், பஞ்சாப், கர்நாடகா, அசாம் மாவட்டங்களில் தலா 2 இடங்களும் என இன்னும் 18 இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் ரூ.1.5 கோடி ரொக்கம் மற்றும் ஒன்றரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளதாகவும் பலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.