அக்-2 ல் நடைபெறும் ஊர்வலம், பேரணிக்கு அனுமதியும் தடையும்!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் அணிவகுப்பும் பேரணியும் நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், உயர்நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் பேரணி நடத்த அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் காவல் துறையினர் 50 இடங்களிலும் பேரணியை நடத்துவதற்கு அனுமதி மறுத்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் நிகழும் சட்டம் ஒழுங்கும் பிரச்சனை காரணமாக மத அடிப்படையிலாக நடைபெறக்கூடிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகிறது.

இந்த சூழலில் ஆர்.எஸ். எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கினால், அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஒருவேளை காவல் துறை அனுமதி மறுத்துள்ள காரணம் வலுவாக இருக்கும் பட்சத்தில், பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நாளை விசாரணைக்கு வர உள்ளது.

இதேபோல், அக்டோபர் 2-ம் தேதி சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தப்போவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்திருந்தார்.

அதே நாளில் வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த அனுமதி கோரியதால் சட்டம் ஒழுங்கு கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like