ஒரு முறை காரில் பயணம் சென்று கொண்டிருந்தார் கலைஞர். அப்போது உடன் வந்தவர்களிடம், “பூம்புகார் திரைப்படத்தில் வாழ்க்கை என்னும் ஓடம், வழங்குகின்ற பாடம்… என்ற பாடலை பாட நல்ல குரல் வளம் கொண்ட பாடகர் இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டுள்ளார்.
அதற்கு ஆளாளுக்கு ஒரு பாடகரைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, கார் கொடுமுடி அருகே வந்ததும், “இந்த ஊரில் தானே கே.பி.சுந்தராம்பாள் இருக்கிறார்” என்று கேட்டார் கலைஞர்.
“ஆமாம் இந்த ஊர்தான்… ஆனால் அவர் ரொம்ப அதிகமா பணம் வாங்கும் பாடகர் மற்றும் நடிகை” என்று சொல்லியுள்ளனர்.
“பரவாயில்லை விடுப்பா… கேபிஎஸ் வீட்டுக்குப் போ” என்று காரை அவரது இல்லத்திற்கு செலுத்தச் சொல்கிறார் கலைஞர்.
வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்று உபசரித்து பிறகு என்ன விபரம் என்று கேட்ட கேபிஎஸ்-ஸிடம் விவரத்தை எடுத்துரைத்தார் கலைஞர்.
அமைதியாக கேட்ட கேபிஎஸ், “என்னால் தற்போது பாட இயலாது” என்று சொல்லி மறுக்கிறார்.
அவர் மறுத்ததற்கு காரணம் அவரின் கணவரின் சிறையில் இருந்ததால் நடிப்பதை, பாடுவதை நிறுத்திக் கொண்டார் என்பதைக் கேட்டு தெரிந்து கொண்டார் கலைஞர்.
பிறகு கலைஞர் மீண்டும் வற்புறுத்தி உங்கள் செலவினங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று கூற, கேபிஎஸ் நீண்ட யோசனைக்கு பிறகு சரி, நீங்கள் சொன்னதை என் அப்பனிடம் சொல்கிறேன். அவன் உத்தரவு தந்தால் நான் பாடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
உடனே கலைஞர் சிரித்தபடியே, ”இந்த கருணாநிதி சொன்னான்” என்று சொல்லுங்கள் என்று சொல்லி கிளம்பி சென்னை நோக்கி பயணம் செய்தார்.
அதன் பிறகு, அந்தப் பாடலை தன் கணீர் குரலோடு பாடியது மட்டுமல்லாமல் படத்தில் படகில் சகபயணியாக வந்து வாயசைத்து நடித்திருப்பார்.
அந்தப் பாடல் இதுதான்….
வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்கவொண்ணா வேதம்
(வாழ்க்கை எனும்)
வாலிபம் என்பது கலைகின்ற வேடம் அதில்
வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்
வாலிபம் என்பது கலைகின்ற வேடம்
அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்
வரும் முன் காப்பவன் தான் அறிவாளி
புயல் வரும் முன் காப்பவன் தான் அறிவாளி
அது வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி
(வாழ்க்கை எனும்)
துடுப்புகள் இல்லா படகு
அலைகள் அழைக்கின்ற திசை எல்லாம் போகும்
தீமையை தடுப்பவர் இல்லா வாழ்வும்
அந்த படகின் நிலை போலே ஆகும்
அந்த படகின் நிலை போலே ஆகும்
(வாழ்க்கை எனும்)