கலைத் துறையில் மகத்தான சாதனை படைத்த கே.பி.எஸ்!

கே.பி.எஸ் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள், ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பிறந்தவர். இவருக்கு கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு பேர் உடன்பிறந்தவர்கள்.

இளம்வயதிலேயே தந்தையை இழந்த சுந்தராம்பாள், சகோதரரின் ஆதரவில் வளர்ந்தார். ‘கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி’யில் கல்வி கற்றார் இவர், ஆர்வம் காரணமாக காங்கிரஸ் பிரச்சாரங்களில் தவறாது ஈடுபட்டு வந்தார்.

கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றை மையமாக வைத்து பாடல்களையும் பாடி வந்தார்.

ஒலிபெருக்கி வசதி இல்லாத அந்தக்காலத்தில் நெடுந்தொலைவுக்கும் கேட்கும் வகையில் குரலில் கம்பீரத் தன்மையுடனும், தெளிவுடனும் பாடி மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

திரைப்படங்களில் புகழ்பெற்று விளங்கிய கே.பி.சுந்தரம்பாள், சுதந்திரப் போராட்டத்திலும் பங்காற்றியுள்ளார்.

காமராசர் ஆட்சியின் போது 1958-ம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சுந்தராம்பாள்.

கணவர் மறைந்த பிறகு பாடுவதை நிறுத்தியிருந்த சுந்தராம்பாள், மகாத்மா காந்தி அவருடைய வீடு தேடிச் சென்று கேட்டுக் கொண்ட பிறகு, மீண்டும் பாடி தேச சேவையில் ஈடுபட்டார்.

நாடக – இசை – திரைப்படத் துறையிலிருந்து இந்தியாவில் முதன்முறையாக மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கே.பி. சுந்தராம்பாள் தான்.

பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளால் கவுரவிக்கப்பட்ட சுந்தரம்பாள், 1980-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி காலமானார்.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like