ஆஹா தளத்தின் முதல் ரியாலிட்டி ஷோ சர்க்கார் வித் ஜீவா!

ஆஹா தமிழின் முதல் ரியாலிட்டி கேம் ஷோவான ‘சர்கார் வித் ஜீவா’ செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியாகிறது.

தமிழுக்கென பிரத்யேகமாக மிகப்பெரிய ரியாலிட்டி ஷோக்களை ஆஹா உருவாக்கி வருவது பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கில் இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிவரும் ஆஹா, நூறு சதம் உள்ளூர் பொழுதுபோக்கு OTT இயங்குதளம் என்கிற சிறப்பில், அதன் தமிழ் பதிப்பிற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது ஆஹா தமிழுக்கென பிரத்யேகமாக படைப்புகளை உருவாக்க ஆரம்பித்துள்ளது.

தமிழின் முன்னணி நடிகர் ஜீவா, ஒவ்வொரு வாரமும் நான்கு பிரபலங்கள் விளையாடும் இந்த தனித்துவமான கேம் ஷோவில் தொகுப்பாளராக தன் OTT அறிமுகத்தைத் தொடங்க உள்ளார்.

நடிகர் ஜீவா பேசும்போது, “எல்லோரும் SMS பட ஜீவாவை மீண்டும் எப்போது பார்க்கலாம் என்று கேட்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் என்னை மீண்டும் அப்படி பார்ப்பது மட்டுமல்லாமல், எந்த நேரத்திலும் விளையாட்டின் விதிகளை வளைக்கும் ஆற்றலுடன் இயங்கும், ஒரு இனிமையான தொகுப்பாளராகவும் பார்ப்பார்கள். சர்க்கார் எனும் இந்த கேம் ஷோவினை நான் மிகவும் ரசித்தேன்” என்றார்.

ஒவ்வொரு எபிஸோடிலும் நான்கு பிரபலங்கள் கலந்து கொள்ளும் ‘சர்கார் வித் ஜீவா’ ப்ரோமோவில் “இங்க ஆடறது தான் அவங்க, ஆனா ஆட்டம் என்னோடது (அவர்கள் விளையாட வந்திருக்கலாம், ஆனால் நான்தான் இங்கே உண்மையான வீரர்)” என்று ஜீவா கூறுவது அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.

இந்த கேம் ஷோவில் பெரும் பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.

கேள்வி பதில் அடிப்படையிலான இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவார்கள், 10 சுற்று கேள்விகளுக்கு ஏலம் விடுவார்கள்.

நட்சத்திரங்களைப் பற்றி இதுவரை கேள்விப்படாத ரகசியங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட கேள்விகளுடன் ஒரு பெரிய விருந்தை உறுதியளிக்கிறது.

ஆஹா தளத்தின் சிஇஓவான அஜித் தாக்கூர், “ஆஹா அதன் பார்வையாளர்களுக்கு நூறு சதம் உள்ளூர் பொழுதுபோக்குகளை மிக உயர்ந்த தரத்துடன் வழங்க உறுதி எடுத்துள்ளது.

நேர்த்தியான மாறுபட்ட அனுபவத்துடன் கூடிய ரியாலிட்டி ஷோக்களை உருவாக்குதில் ஆஹா சிறந்து விளங்குகிறது.

உலகெங்கிலும் உள்ள தமிழ் பார்வையாளர்களுக்கு இந்த ‘கேம் ஷோக்களை’ வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

பா. மகிழ்மதி

You might also like