அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை மேற்கொண்டிருக்கிறது.
புதுக்கோட்டையில் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 13 இடங்களிலும், கோவையில் வேலுமணிக்குச் சொந்தமான 26 இடங்களிலும் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேலுமணியின் வீட்டில் சோதனை நடந்தபோது, அவருடைய வீட்டிற்கு முன்னால் குவிக்கப்பட்ட அ.தி.மு.க தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
ஆனால் இப்படிப்பட்ட சோதனைகள், அதிலும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக நடப்பது முதல்முறையல்ல. இதற்கு முன்பும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான இடங்களில் சோதனைகள் நடந்திருக்கின்றன.அவற்றில் என்னென்னவற்றைக் கைப்பற்றினார்கள் என்பது அப்போதும் தெரிவிக்கப்படவில்லை. மேற்கொண்டு சோதனைகளைத் தொடர்ந்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போதும் அதே மாதிரியான புதிர்த்தன்மையுடன் சோதனைகள் நடக்கின்றன.
சோதனைகளின் பின்விளைவாக என்ன நடக்கும்?
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியிருக்கிறது.
*