தேர்தல் சமயத்தில் அதிகமான பொய்ச் செய்திகளை வெளியிடும் மாநிலம்!

சமூக வலைதளங்களில் கடந்தாண்டு வெளியான பொய்ச் செய்திகள் தொடர்பாக பதிவான வழக்குகள் குறித்து, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மேற்கு வங்கத்தில் மிக அதிகமாக பொய்ச் செய்திகள் வெளியிடப்படுவது தெரியவந்துள்ளது.

கடந்தாண்டு மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பா.ஜ., பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டியது.

இத்தேர்தலையொட்டி சமூக வலைதளங்களில் அதிகமான செய்திகள் வெளியிடப்பட்டன. இதில், நிறைய பொய்ச் செய்திகள் வெளியானதாக புகார்கள் அளிக்கப்பட்டு, வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

நாட்டிலேயே மிக அதிகமாக மேற்கு வங்கத்தில் தான், பொய்ச் செய்தி வெளியிட்டதாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநிலத்தில் பொய் செய்தி வெளியிட்டதாக 34 வழக்குகளும், உத்தர பிரதேசத்தில் 24 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக நாடு முழுதும் 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

You might also like