தமிழிலும் வெளியான ‘ஆகாச வீதிலு’!

அறிமுக நடிகர் கௌதம் கிருஷ்ணா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆகாச வீதிலு’ இன்று தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் கௌதம் கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘ஆகாச வீதிலு’.

இதில் கௌதம் கிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜிதா பொன்னாடா நடிக்கிறார்.

நாடக பாணியில் தயாராகியுள்ளது இப்படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ளது.

அறிமுக நாயகன் கௌதம் கிருஷ்ணா சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் மருத்துவ பட்டப்படிப்பை படித்து வருகிறார்.

கதையின் நாயகனாக அறிமுகமாவதுடன் படத்தை இயக்கி இயக்குநராகவும் அவர் அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் பாடல்கள் சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

மது, மாது, போதை என தன் இளமையை பொறுப்பில்லாமல் தட்டிக் கழிக்கும் நாயகனின் வாழ்க்கையில், காதலியாக ஒரு பெண் குறுக்கிடுகிறாள்.

அதன் பிறகு நாயகனின் வாழ்க்கை சரியான பாதையில் பயணித்ததா? இல்லையா? என்பதை இளைய தலைமுறையினர் ரசிக்கும் வகையிலான காதல் காட்சிகளுடன் தயாராகியுள்ளது ஆகாச வீதிலு.

You might also like