திரைப்பட விழாக்களில் 59 விருதுகளை வென்ற ‘சஷ்தி’!

‘சஷ்தி’ என்ற குறும்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் ஜூட் பீட்டர் டேமியான். 30 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ள இக்குறும்படம் ஆகஸ்ட்-15ஆம் தேதி ஐ ட்யூன்ஸ் மற்றும் கூகுள் பிளே ஆகியவற்றில் ரிலீசாகி உள்ளது.

தாய்க்கும் மகனுக்குமான உறவை மையப்படுத்தி தயாராகியுள்ளது. வளர்ப்பு மகன் என்பதை அறியாமலேயே வளரும் சிறுவன் ஒருவன், சாதாரண பெண்ணாக இருக்கும் ஒருவரை எப்படி கடவுள் என நினைக்கும் அளவுக்கு, ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரைப் பற்றிய அவனது அபிப்ராயங்கள் எப்படி மாறுகின்றன என்பதை அழகாக சொல்கிறது இந்த குறும்படம்.

லைவ் ஆடியோ ரெக்கார்டிங் முறையில் படம் உருவாகியுள்ளது தனிச்சிறப்பு.

செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘சஷ்தி’ குறும்படம் டோக்கியோ முதல் டொராண்டோ வரை , 25 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் 59 விருதுகளை வென்றுள்ளது.

ஒரு பட்டயக் கணக்கரான ஜூட் பீட்டர் டேமியான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். எல்வி பிரசாத் திரைப்படப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து டைரக்சன் கற்றுக் கொண்டவர். தன் முதல் படைப்பாக இந்த ‘சஷ்தி’ என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

“30 நிமிடங்களுக்கு குறைவான நேரமே ஓடக்கூடிய இந்த குறும்படத்தை ஒரே வாரத்தில் படமாக்கி முடித்து விட்டாலும் இதற்கான கதை மற்றும் திரைக்கதையை உருவாக்க கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஆனது” என்கிறார் ஜூடு பீட்டர் டேமியன்.

இந்த குறும்படத்தை https://apple.co/3PpIXnJ என்கிற லிங்க் மூலம் iTunesலும் https://bit.ly/3JXXoOD என்கிற லிங்க் மூலம் Google Playயிலும் காணலாம்.

You might also like