இந்தியா – அமெரிக்கா இடையே ராணுவக் கூட்டுப் பயிற்சி!

இந்தியா – அமெரிக்கா இடையேயான ராணுவ சிறப்பு படைகளின் வருடாந்தரப் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதன்படி 12வது பயிற்சி வாஷிங்டனில் உள்ள லெவிஸ் மெக் கார்ட் கூட்டுப் படைதளத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது. 

இதையடுத்து 13வது கூட்டுப் பயிற்சி இமாச்சலப் பிரதேச மாநிலம் பாக்லோவில் 21 நாட்கள் நடைபெற்று வந்தது.

இந்தப் பயிற்சிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. முதல் கட்டத்தில் எதிர்ப்பை முறியடிப்பது, போர் தந்திர நிலையில் சிறப்பு நடவடிக்கைகள் ஆகியவையும், இரண்டாவது கட்டத்தில் 48 மணி நேர மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பயிற்சியும் நடைபெற்றது.

இரு அணிகளும் கூட்டுப் பயிற்சியோடு திட்டமிடுதல், பல்வேறு ஒத்திகை நடவடிக்கைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டன.

இந்தப் பயிற்சி குறித்து இரு நாடுகளின் படைகளும் திருப்தி தெரிவித்துள்ளன.

தற்போதைய சர்வதேச அளவிலான சூழலில், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களை கருத்தில் கொண்டு அமெரிக்க சிறப்பு படைகளுக்கு இந்த பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது.

You might also like