பிறப்பு: ஜனவரி 8, 1901.
மொழிப் புலமை: தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன்.
சிறப்புப் பெயர்: தெ.பா.மீ.
தொழில்: தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர்
கல்வி: பி.ஏ., பி.எல்., எம்.ஏ, எம்ஓஎல்
இலக்கிய வகை கருப்பொருட்கள்: தமிழிலக்கியம், வரலாறு, மொழியியல்.
விருதுகள்: கலைமாமணி, பத்மபூசன்
தெ.பொ.மீனாட்சிசுந்தரம் சென்னை சிந்தாரிப்பேட்டையில் 1901 ஆம் ஆண்டு ஜனவரி 8 ம் நாள் பொன்னுசாமி கிராமணியாருக்கு மகனாகப் பிறந்தார்.
அவருடைய தந்தைக்கு தமிழ் மீதும் தமிழ் அறிஞர்கள் மீதும் இருந்த பற்றினால் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பெயரை மகனுக்கு இட்டார்.
1920: பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்
1922: பி.எல். பட்டம் பெற்றார்.
1923: எம்.ஏ. பட்டம் பெற்று, வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
1923: சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக தன்னைப் பதிவு செய்து கொண்டார்.
1924: சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1925: அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராய் இருந்து தொண்டு புரிந்தார்.
1934: தமிழ் இலக்கிய இலக்கண ஆர்வத்தால் பி.ஓ.எல், எம்.ஓ.எல். பட்டங்களும் பெற்றார்.
1941: நாட்டு உரிமைக்காக மறியல் செய்து சிறை சென்றார்.
1944: இவரது தமிழ்ப் புலமையைக் கண்ட அண்ணாமலை அரசர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியராக நியமித்தார்.
பேராசிரியராகப் பொறுப்பேற்ற தெ.பொ.மீ. 1944 முதல் 1946 வரை அங்குப் பணியாற்றினார்.
1958: 1958: மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார்.
1961: இவரது மொழிப்புலமையால் அயல்நாட்டுப் பல்கலைக்கழகமான சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார்.
1966: மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக 1966 முதல் 1971 வரை பணியாற்றினார்.
1973, 74: திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழகச் சிறப்பாய்வாளராக பொறுப்பேற்றார்.
1974: ஆழ்நிலைத் தியானத் தேசியக் குழுவில் உறுப்பினராக இருந்து தொண்டு செய்துள்ளார்.
விருதுகள்: இவருக்குத் தருமபுர ஆதீனம் “பல்கலைச் செல்வர்” என்றும், குன்றக்குடி ஆதீனம் “பன்மொழிப் புலவர்” என்றும் விருதுகளும், தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருதையும், இந்திய அரசின் சார்பில் பத்மபூசன் விருதையும் அளித்துச் சிறப்பித்தனர்.
மறைவு : ஆகஸ்ட் 27, 1980
– நன்றி: தினமணி