சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 11 – ஆம் தேதி, 2020-2021-ஆம் ஆண்டிற்கான கல்லூரியின் 22- வது பட்டமளிப்பு விழாவும், ஆகஸ்ட் 12 – ஆம் தேதி, 2021-2022 – ஆம் ஆண்டிற்கான கல்லூரியின் 23- வது பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது.
22 – வது பட்டமளிப்பு விழாவின் போது 1700 மாணவிகளுக்கும், 23-வது பட்டமளிப்பு விழாவின் போது 1500 மாணவிகளுக்கும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முதல் நாள் விழாவில் மாற்றம் பவுண்டேஷன் உடைய நிறுவனர் திரு.சுஜித் குமார், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு.சந்தோஷ் குமார் அவர்கள் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
இரண்டாம் நாள் விழாவின்போது உளவியல் நிபுணர் திருமதி.டாக்டர் சரண்யா ஜெயக்குமார், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் திரு.சைதை துரைசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு பட்டங்களை சிறப்பித்தனர்.
விழாவின் இரண்டு நாளும் கல்லூரியின் தலைவர் முனைவர் திரு.குமார் ராஜேந்திரன், கல்லூரியின் தாளாளர் முனைவர் திருமதி.லதா ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி மணிமேகலை, துணை முதல்வர் முனைவர் திருமதி லட்சுமி பாலாஜி,
தமிழ்த்துறை தலைவர் முனைவர் திருமதி அபிதா சபாபதி மற்றும் பேராசிரியைப் பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினர்களோடு சேர்ந்து மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.
விழாவில் பல்கலைக் கழக அளவில் தரவரிசையில் இடம்பிடித்த கல்லூரி மாணவிகளுக்கு பதக்கங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.