2014, மே மாதம் 20 ஆம் தேதி.
டெல்லி நாடாளுமன்றத்திற்குள் முதன்முறையாக பிரதமராக நுழைவதற்கு முன் அதன் வாசல் படியைத் தலையால் தொட்டு வணங்கினார் நரேந்திர மோடி.
அப்போது அவர் பேசிப் பிரபலமான சில வாக்கியங்கள்:
- தேநீர் விற்றுத் தான் இன்று இருக்கும் நிலையை நான் அடைந்திருக்கிறேன்.
- எளிதான பணிகளைத் தான் செய்ய வேண்டும் என்றால் நான் பிரதமர் ஆகியிருக்கக் கூடாது. நான் பிரதமர் ஆனதே கடினமான பணிகளைச் செய்வதற்காகத் தான்.
- நான் இதயத்திலிருந்து பேசுகிறேன், ஏழையான எனக்கு ஏழைகளின் தேவை என்ன என்று தெரியும்.
- நான் உங்களிடம் உறுதி அளிக்கிறேன். நீங்கள் 12 மணி நேரம் உழைத்தால் நான் 13 மணி நேரம் உழைப்பேன். நீங்கள் 14 மணி நேரம் உழைத்தால் நான் 15 மணி நேரம் உழைப்பேன்.
- நான் இந்த நாட்டின் பிரதமர் அல்ல. பிரதான சேவகன்.