பீகாரில் பள்ளி வார விடுமுறையாக வெள்ளிக்கிழமை அறிவிப்பு!

பீகார் மாநிலம் இஸ்லாமிய மக்கள் தொகையை அதிக அளவில் கொண்ட மாநிலமாகும்.

இதனால் அங்குள்ள குறிப்பிட்ட 500 பள்ளிகளுக்கு வார விடுமுறை ஞாயிற்றுக் கிழமைக்குப் பதிலாக வெள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 5 வட்டாரங்களில் உள்ள 37 அரசுப் பள்ளிகளில் வார விடுமுறையாக வெள்ளி விடுமுறை நாளாக இருக்கும் என பீகார் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்லாமிய மக்கள் தொகை அதிகம் கொண்ட இம்மாவட்டத்தில், போதியா வட்டாரத்தில் உள்ள 16 பள்ளிகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டும். ஞாயிறன்று திறந்திருக்கும்.

மேலும், வைஷாலி மாவட்டத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. பீகாரில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வார விடுமுறையாக ஞாயிற்றுக் கிழமைக்குப் பதில் வெள்ளி கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரின் கிழக்குப் பகுதியில் கிஷன்கஞ்ச், அராரியா, கதிகார் மற்றும் புர்னியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70 சதவீதம் வரை முஸ்லிம் மக்கள்தொகை அதிகளவில் உள்ளது.

புர்னியாவில் 200 மற்றும் கிஷ்ன்கஞ்ச் மாவட்டத்தில் 19 அரசுப் பள்ளிகளில் இந்நடைமுறைகள் உள்ளன எனக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் தலைவர்கள் அறிவுறுத்தலின்படி, பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த நடைமுறை அமலில் உள்ளதாக ஆசிரியர்கள் கூறினர்.

இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிகளுக்குச் செல்வதால் தங்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிட இயலவில்லை என சில பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

You might also like