தற்கொலை எண்ணத்திற்கு மாணவர்கள் செல்லக்கூடாது!

பள்ளியில் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் உயிரிழப்பதும், தங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதும் தற்போது அதிகரித்திருக்கிறது. தினமும் யாராவது ஒரு மாணவி உயிரிழப்பு தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சென்னையில் உள்ள கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்துப் பேசியிருக்கிறார்.

“மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் அவமானங்கள், இடையூறுகளைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மாணவிகளுக்குப் பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை தரும் எத்தகைய செயல் நடைபெற்றாலும், அரசு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி உடனே அதற்குரிய தண்டனையைப் பெற்றுத் தரும்.

எந்தச் சூழலிலும் தற்கொலை எண்ணத்திற்கு மாணவர்கள் செல்லக் கூடாது. சோதனைகளைச் சாதனைகளாக மாற்ற வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் மாணவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்’’ என்று பேசியிருக்கிறார்.

மாணவிகளின் தொடர் உயிரிழப்புகள் குறித்து ஆராய்வதற்கு உளவியல் மற்றும் சமூகவியல் பார்வையில் ஆராயத் தனிக்குழுவை அமைக்க வேண்டும்.

*

You might also like