தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டு வருகிறது.
அதன்படி நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், புதிதாக 2,033 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த பாதிப்பு 35 லட்சத்து 28 ஆயிரத்து 384-ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 466 பேருக்கும் அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 217 பேருக்கும் கோவையில் 187 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும்,
கொரோனாவுக்கு நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 38 ஆயிரத்து 32 ஆக உயர்ந்துள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 2,383 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்து 74 ஆயிரத்து 199-ஆக உயர்ந்துள்ளது என்றும்,
தற்போது 16,153 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.