ஆந்திராவில் மூடப்பட்ட சினிமா தியேட்டர்கள்!

ஆந்திர மாநிலத்தில் சினிமா ரசிகர்களின் வருகை குறைந்ததை அடுத்து, அங்குள்ள 400 தியேட்டர்கள் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ஒரு காட்சிக்கு ஏசி தியேட்டர் பராமரிப்புக்கு 5 ஆயிரம் ரூபாயும், ஏசி அல்லாத தியேட்டர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும் தேவைப்படுகிறது.

இதுதவிர மின் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளும் அதிகம் இருக்கின்றன. ஆனால், சமீப காலமாக தியேட்டர்களுக்கு ரசிகர்களின் வருகை மிகக் குறைவாக இருக்கிறது.

வெறும் பத்து, பதினைந்து பேர் மட்டுமே வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், தியேட்டர்கள் நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்லி ஜூலை 16 ஆம் தேதி முதல் 400 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

தசரா அல்லது பொங்கல் பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ள நிலையில், அதுவரை தியேட்டர்களை மூடிவைக்க தியேட்டர் அதிபர்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like