அ.தி.மு.க பொதுக்குழுவில் ஓ.பி.எஸ். மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
திண்டுக்கல் சீனிவாசன் ஓ.பி.எஸ். ஆண்மையுள்ள தலைவரா? என்று கேள்வி கேட்டுவிட்டு, உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் எடப்பாடியார் பக்கமே நிற்கின்றன. உண்மையான கட்சியின் ரத்தம் ஓ.பி.எஸ்.ஸின் உடம்பில் ஓடுகிறதா?
வெட்கம், மானம், சூடு, சுரணை அவருக்கு இல்லை. இன்றைக்கு அரசியல் ஆண்மையுடன் இருக்கிறார் எடப்பாடியார் என்றார்.
இதனிடையே ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் உள்ளே புகுந்தபோது பெரும் அமளி உருவானது. அவருடைய ஆதரவாளர்கள் திரண்டபோது கட்டைகளால் தாக்கிக் கொண்டனர்.
கட்சி அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றார்கள். அதையடுத்து கட்சி அலுவலகத்திற்குச் சீல் வைக்கப்பட வேண்டும்
என்கிற வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
ராயப்பேட்டை தலைமை அலுவலகத்திற்கு முன்பு தொடர்ந்து கலவரச் சூழல் காணப்படுகிறது.
பொருளாளர் என்ற முறையில் ஓ.பி.எஸ். சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அடுத்துச் சட்டரீதியான போராட்டத்தை நடத்துவதற்கு ஓ.பி.எஸ்.ஸூக்கு அவை பயன்படும் என்று சொல்லப்படுகிறது.