என் ராசாவின் மனசிலே – அசலான பின்னணி!

இயக்குநர் கஸ்தூரிராஜா இயக்கிப் பெரும் வெற்றி அடைந்த படம் ‘என் ராசாவின் மனசிலே’’.

அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ராஜ்கிரண்.

கஸ்தூரிராஜா அந்தப் படம் வெற்றி அடைந்த போது சொன்னார்.

“நான் பி.ஏ.பட்டதாரி. ‘என் ராசாவின் மனசிலே’ நான் கண்டெடுத்த உண்மைக் கதை. ராஜ்கிரண் நடித்த ‘மாயாண்டி’ நான் நேரில் பார்த்த உண்மைப் பாத்திரம்.

அந்த நிகழ்ச்சியை முதலில் சிறுகதையாக எழுதி ஒரு பத்திரிகைக்கு அனுப்பினேன். அது திரும்பி வந்துவிட்டது. இன்னும் கூட அதை  வைத்திருக்கிறேன். அதன் பிறகு தான் அதைப் படமாக எடுத்தேன்’’.

*

You might also like