சார்தாம் யாத்திரையில் 203 பக்தர்கள் உயிரிழப்பு!

இமயமலை அடிவாரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புண்ணிய தலங்களுக்கு செல்வது சார்தாம் யாத்திரை எனப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கியது. இதுவரை 2 மாத யாத்திரையில் 2.5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பக்தர்கள் அதிகப்படியாக உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

கடந்த 26-ம் தேதி கணக்கெடுப்பின்படி, 203 பேர் யாத்திரையின் போது இறந்துள்ளதாகவும், அதிகபட்சமாக கேதார்நாத்தில் 97 பேரும், பத்ரிநாத்தில் 51 பேரும், யமுனோத்திரியில் 42 பேரும், கங்கோத்ரியில் 13 பேரும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், பெரும்பாலானோர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மிக மோசமான வானிலையே உயிரிழப்புகளுக்கு காரணம் என அம்மாநில அமைச்சர் தன்சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

You might also like