உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவைச் சந்திக்கும்!

-ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், பருவநிலை மாற்றம், கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றால் முன்பு இல்லாத அளவுக்கு சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகக் கூறினார்.

“இதனால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய போரால் நிலைமை மோசமடைந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் உணவுப் பற்றாக்குறையால் பல்வேறு நாடுகள் பெரும் பாதிப்பை சந்திக்கும்.

இதனால் ஓரிரு ஆண்டுகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும். ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் வேளாண் பணிகளுக்குத் தேவையான உரம், எரிபொருள் ஆகியவற்றின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

2023ம் ஆண்டில் உணவு பஞ்சம் தீவிரமடையும். உணவு பொருட்களுக்கு சர்வதேச அளவில் தட்டுப்பாடு ஏற்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் , “உணவு பொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க ஐநா. அமைப்பின் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

வேளாண் பணிகள் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக விவசாயிகளின் நிதி ஆதாரத்தை பெருக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரம் காட்ட வேண்டும். உணவு சந்தையை பலப்படுத்த தனியார் துறையினரும் உதவி செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like