‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆருக்கும், ‘ஹாலிவுட் ஸ்டார்’ ஜாக்கிசானுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.
எம்.ஜி.ஆர். நாடகக் கம்பெனியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ஜாக்கிசான் சர்க்கஸ் கம்பெனியில் இருந்து வந்தவர்.
சண்டை காட்சிகளில் எம்.ஜி.ஆர். சிரித்தபடி சண்டை போடுவார். ஜாக்கிசானும் சிரித்துக் கொண்டே சண்டை போடுவார்.
எம்.ஜி.ஆர். சிலம்பம் உள்பட அனைத்து சண்டைகளையும் முறைப்படி கற்றவர். ஜாக்கிசான், குங்பூவில் அனைத்து நுணுக்கங்களையும் கற்று தேர்ந்தவர்.
சண்டைக் காட்சிகளில் இருவருமே ‘பர்பெக்சன்’ பார்ப்பார்கள். சண்டைக் காட்சிகளைப் படமாக்கும்போது எந்தச் சூழல் இருந்தாலும் விழுவது, ஓடுவது, ஸ்டெப்ஸ் ஆகியவற்றில் இருவருக்கும் ‘பர்பெக்சன்’ தவறாது.
– நன்றி: தினந்தந்தி