நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமார்.

கமலுக்கும் எனக்குமான தொடர்பு 1997க்குப் பிறகுதான் வந்தது. எனக்கு மட்டுமல்ல என் தோழர்களுக்கும் தான். சின்ன வயதில் இருந்தே நான் அவர் படத்தைப் பார்த்து தான் வளர்ந்தேன். எனது ஊர் பக்கத்தில் இருக்கும் சீதாலட்சுமி தியேட்டரில் ஓடிய ‘சகலகலா வல்லவன்’ படத்தை அத்தனை முறை பார்த்து மகிழ்ந்தேன் என்றால் அது அவர்மீது உள்ள ஈர்ப்பின் காரணமாகத்தான்.

தான் கற்றதை தன் ரசிகர்களுக்கும் கற்றுக்கொடுத்தவர் கமல்தான். முதன் முறையாக கமலை நான் மணா மூலமே சந்தித்தேன். அன்று அவரின் பிறந்தநாள். அவரோடு இருபது நிமிடம் பேசினேன்.

அப்போது அவர் சித்தர் கவிதை, ஜென் கவிதை தொடக்கி பல நிகழ்வுகளைப் பற்றிப் பேசினார். இவரின் ஆளுமை அதில் தெரிந்தது. அவரின் அந்தப் பேச்சு ஒரு பல்கலைக் கழகத்தில் படித்தது போல் இருந்தது.

பிறகு ஐ.டி.ஐ. யில் நடந்த திரைக் கதை பயிற்சிப் பட்டறையில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது வந்தவர்களிடம் கமல் ஒரு மூத்த சகோதரனைப் போலவும், தாய்மை உணர்வுடனும் நடந்து கொண்டார்.

ஒருமுறை கமல் சின்ன வயதில் இருக்கும்போது சாருகாசன் கமலை எ.வி.எம்மிற்கு அழைத்துச் சென்றார். அப்போது கமலைப் பார்த்த மெய்யப்பச் செட்டியார்  “தம்பி படத்துல நடிக்கிறியா” எனக்கேட்டதும் அதற்க்கு கமல்  “ஒரு பிளைன் மூத் காரும், அல்சேசன் நாயும் வாங்கிக் கொடுத்தால் நடிக்கிறேன்” என்று அந்த வயதிலேயிய துணிச்சலுடன் பேசி நடித்த ஒப்பற்ற கலைஞன் தான் கமல்.

கமலுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவரும் ஒரே நேரத்தில் பல புத்தகங்களைப் படிக்கும் குணம் உண்டு. சிறந்த கலைஞனைப் பற்றி கூறும் இந்த நூலைத் தொகுத்த மணாவுக்கு நன்றி.

You might also like