எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பது எது?

– கவியரசர் கண்ணதாசனின் நம்பிக்கை மொழிகள்:

அன்பிலே நண்பனை வெற்றிகொள். களத்திலே எதிரியை வெற்றிகொள். பண்பிலே சபையை வெற்றிகொள்.

கேட்கும்போது சிரிப்பு வரவேண்டும். சிந்தித்துப் பார்த்தால் அழுகை வரவேண்டும். அதுதான் நல்ல நகைச்சுவை.

நெருப்பில் இறங்கிய பிறகு வெயிலுக்கு அஞ்சுவதில் அர்த்தமில்லை.

கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே.

நல்லதே நினை, நல்லதே பேசு, நல்லதே செய், நல்லதே நடக்கும்.

பாத்திரத்தின் நிறமல்ல பாலின் நிறம். ஆத்திரத்தின் நிறமல்ல அறிவின் நிறம்.

இந்த உலகத்திலே வேர் இல்லாமலும் நீர் இல்லாமலும் வளரக்கூடிய செடி ஆசைதான்.
அடக்கத்தின் மூலம் தோல்வியிலிருந்து மீண்டு வெற்றியுடன் முன்னேறியவர்கள் உண்டு.

எதையும் இன்னொருவனுக்குக் கொடுத்துவிட முடியும். ஆனால் இந்த நிம்மதியை மட்டும் மனிதன் தன்னிடத்தேதான் பெற்றுக் கொள்ள முடியும்.

அனுபவம் என்பது ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே.
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே. ஒருவேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்காகவும் நீ மாற வேண்டியிருக்கும்.

அளவுக்கு மிஞ்சிய சாமர்த்தியம் முட்டாள்தனத்தில்தான் முடியும்.

மனிதன் மரம்போல் வளர்கிறான் என்பது பெருமையல்ல. மரம்போல் பயன்படுகிறானா என்பதே பெருமை.

நீ வெற்றிக்காகப் போராடும்போது வீண் முயற்சி என்று சொல்பவர்கள், நீ வெற்றி பெற்ற பின் விடாமுயற்சி என்பார்கள்.

அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப் பெறமுடியாது. அறிவின் மூலம் அதிர்ஷ்டத்தைப் பெறலாம்.

உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும். உன் நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும்கூட மிதிக்கும்.

செயல்படுவோம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை நிச்சயம் வளமடையும்.

அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பச் செய்கிறவன் மூடன்.

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும், இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.

நல்லவன் படகில் போகும்போது துடுப்பு தண்ணீருக்குள் மூழ்கி விட்டால், நதியே திசை மாறி அவன் சேரவேண்டிய இடத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம். அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.

இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை கவனமாகக் கையாள வேண்டும். இதே மாதிரி எந்தப் பக்கமும் சேரக்கூடிய மனிதர்களோடு கவனமாக இருக்க வேண்டும்.

சிறகு கிடைத்தால் பறப்பது மட்டும் வாழ்க்கையல்ல. சிலுவை கிடைத்தால் சுமப்பதுதான் வாழ்க்கை.

எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
ஒன்று தவிர்க்க முடியாது என்கிறபோது, அதை எதிர்கொளளும் தைரியம் வந்துதானே தீரவேண்டும்

தொகுப்பு – சங்கத் தமிழ்

You might also like