ஹெல்மெட் அணியாத 2023 பேர் மீது வழக்கு!

இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பயணிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட 315க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் பயணிகளிடம் 100 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

நேற்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 1,903 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததாக 2023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்துகளைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி ஹெல்மெட் விதியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், இந்த சோதனை தொடரும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

You might also like