நினைவில் நிற்கும் வரிகள்:
***
மக்களொரு தவறு செய்தால்
மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால்
மாநிலத்தில் யார் பொறுப்பார்?
நினைத்து வந்த செயலொன்று
நடந்து போன கதையொன்று
நீதி தேவன் காலடியில்
வீழ்ந்து விட்டேன் நானின்று
(நினைத்து)
இருட்டினில் தவித்த இருவரைக் காக்க
ஏற்றிட முயன்றேன் ஒரு விளக்கை – அந்த
இருட்டினில் நானே மூழ்கிவிட்டேன்
இங்கு யாரிடம் சொல்வேன் என் வழக்கை?
(நினைத்து)
முறைகெட்ட மன்னனுக்கு முடியெதற்கு?
நெறிகெட்ட நெஞ்சிற்கு நினைவெதற்கு?
கரைபட்டுப் போன இந்தக் கரமெதற்கு?
இந்தக் கரமெதற்கு?
– 1963 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘காஞ்சித் தலைவன்‘ திரைப்படத்தில் இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் ஆலங்குடி சோமு.
இசை: கே.வி. மகாதேவன்.
குரல்: டி.எம். சௌந்தரராஜன்.
இயக்கம்: ஏ.காசிலிங்கம்