வெம்பும் பெண்களுக்கு இங்கே இடமில்லை!

நினைவில் நிற்கும் வரிகள்:

கதிரவனின் தனிமையினாலே
ஊருக்கு நன்மை  – இந்த
கன்னிமகள் தனிமையினாலே
யாருக்கு நன்மை

(கதிரவனின்…)

நதிமகளின் வருகையினாலே
பயிருக்கு நன்மை
நடைபோடும் தென்றலினாலே
மலருக்கு நன்மை
முதிராத இளமையினாலே
உடலுக்கு நன்மை  – இந்த
மலர்விழிகள் அழுதனாலே
எவருக்கு நன்மை

(கதிரவனின்…)

கொம்பில்லாத கொடி என்றாலும்
தரையில் படருமே
வண்டில்லாத பறவை என்றாலும்
கிளையில் வாழுமே
வெம்புகின்ற பெண்மைக்கிங்கே
இடமும் இல்லையே  – நெஞ்சில்
வேதனையை தாங்குகின்ற
திடமும் இல்லையே

(கதிரவனின்…)

– 1981 ம் ஆண்டு மலேசியா வாசுதேவன் நடிப்பில் வெளிவந்த உன்னோடு நான் வருவேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் ஆலங்குடி சோமு.

இசை: பத்மா கல்யாண்.

குரல்: பி.சுசீலா.

You might also like