தஞ்சை களிமேடு கிராமத்தில் தேர் பவனியின்போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவிப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தஞ்சைக்கு புறப்பட்டுச் சென்றார்.
அங்கு உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய முதல்வர், உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கினார்.
இதனிடையே, சட்டசபையில் இதுகுறித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தஞ்சாவூர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து காரணமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், வருவாய்த் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.