பிரிவாற்றாமை…!

ஒரு பென்சிலைச் சீவுவதுபோல
ஒரு கண்ணாடி டம்ளரை மேஜையில்
நகர்த்துவதுபோல
ஒரு புத்தகத்தின் 167ஆம் பக்க ஓரத்தை
மடிப்பதுபோல
ஒரு பழைய பயணச் சீட்டை கசக்கி
எறிவது போல
ஒரு தீக்குச்சியை வெறுமனே
கொளத்துவதுபோல
ஒரு அலைவரிசையிலிருந்து
இன்னொரு
அலைவரிசைக்கு மாறுவதுபோல
நிகழ்கிறது
உன் நீங்குதல்…
தடயமில்லாமல்
யாருடைய தூக்கம் கலைந்துவிடாமல்
நீ எப்போதும் இங்கு இருந்திருக்கவே இல்லை
என்பதுபோல.

– மனுஷ்ய புத்திரன்

– புதிய பார்வை, 2006, மார்ச் (1 – 15) இதழ்

You might also like