குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன் மனிதன் என்று கூறிய சார்லஸ் டார்வின் நினைவு தினம் இன்று (1882).
உலகமே ஒரு பாதையில் பயணப்பட்டுக் கொண்டு இருந்தபொழுது, ”இல்லை, இது தவறு!” என அழுத்தமாக சொல்வதற்கு ஒரு தனிதைரியம் வேண்டும். அது டார்வினிடம் இருந்தது.
பதினேழாயிரம் விலங்கு, பறவை, படிமங்கள், பூச்சிகள் ஆகியவற்றின் மாதிரிகளோடு மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பதில் தொடங்கி எண்ணற்ற முடிவுகளை ஒரு நூலாக தொகுத்து பகிரங்கமாக வெளியிட்டார்.
மனிதனை கடவுள் படைத்தார் என தொன்று தொட்டு நிலவி வந்த நம்பிக்கையிலிருந்து மாறுபட்டு மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வந்தான் என்கிற பரிணாமக் கொள்கை அதில் தான் இருந்தது.
டார்வினின் பரிணாமக் கொள்கையைக் கேட்டு உலகமே ஸ்தம்பித்தது. பலர் ஏற்றுக் கொண்டனர்; பல மதவாதிகள் இவரை குரங்கு என சித்தரித்தார்கள்; இவர் நரகத்துக்குதான் போவார் என்றும் சொன்னார்கள். கடவுளின் முதல் எதிரி என்று டார்வினின் நூலைத் தூற்றினார்கள்.
இவற்றால் மனம் தளர்ந்து விடாமல் இருந்த டார்வின் மதத்துக்கும் தன்னுடைய கண்டுபிடிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என சொன்னதோடு, கடவுளைப் பற்றிய எந்த விசாரணையிலும் ஈடுபடவில்லை.
உலகெங்கிலும் உள்ள அறிவியல் துறை வல்லுநர்கள் அவரது கண்டுபிடிப்பை சரியானது என்று ஏற்றுக் கொண்டனர். அவருடைய மரணத்துக்குப் பின்னர் அரசு மரியாதையோடு நியூட்டனுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். அவர் இறந்து ஒன்றரை நூற்றாண்டு கழித்து அவரின் கோட்பாட்டை தவறென்று சொன்னதற்கு சர்ச் மன்னிப்பு கேட்டது.
நன்றி: சுதந்திரன் முகநூல் பதிவு