அறச்சீற்றத்தின் விளைவா?

இந்தப் படம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சென்னையில் (21.06.1986-ல்) இருந்த போது அவர் வரைந்தது.

இந்தப் படத்தைப் பார்த்தவுடன் என்னன்னவோ நினைவுக்கு வருகிறது.

தம்பி பிரபாகரன் ஈழத்தை (வடக்கு – கிழக்குப் பகுதிகளை) நிர்வாகம் செய்தபோது, எந்த நாட்டின் உதவியையும் எதிர்பார்க்கவில்லை.

அதைவிட பன்னாட்டு நிதி அமைப்பின் (International Monetary Fund – IMF) உதவியும் இல்லாமல் ஈழத்திலுள்ள ஆதாரங்களைக் கொண்டு நல்ல நிர்வாகத்தை வழங்கினார்.

தம்பி பிரபாகரன் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கைத் தரமும், வாழ்க்கைப் பாடுகளும் நிம்மதியாக கழிந்தன.

இன்றைக்கு ஒட்டு மொத்த இலங்கையும் பற்றி எரிகின்றது. சீரழிவுப் பாதையில் செல்கிறது. பிரபாகரன் படையை அழித்ததால், இயற்கை தருகின்ற அறச்சீற்றமா என்று தெரியவில்லை.

இருப்பினும் அந்த மக்கள் படும் பாட்டை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.

– வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

You might also like