vels

‘ஓ சொல்றியா மாமா’ வெற்றியைத் தொடர்ந்து ஆண்ட்ரியாவின் பாடல்!

vels

கதைநாயகனாக நட்டி – நாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கும் ‘வெப்’ படத்துக்காக ஒரு பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார்.

வேலன் புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் திரில்லர் படம் ‘வெப்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹாரூன் இயக்கியுள்ளார்.

மொட்ட ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

ஐடி தொழில்துறை வளர ஆரம்பித்த பின்பு கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக உருவெடுத்த பார், பப் கலாச்சாரத்தை மையப்படுத்தி  கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹாரூன்.

சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த ‘ஓ சொல்றியா மாமா..’ பாடலைத் தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா ‘வெப்’ படத்துக்காக,

“வீக் டே ஃபுல்லா வேலை செய்ய கழுத்துல டைய்…

வீக்கெண்ட் வந்தா ஏத்திக்கிட்டு ஆகிடலாம் ஹை…

இரவு முடியும் வரை… நீ ஆடு… ”

எனும் பப் பாடலை பாடியுள்ளார்.

பாடலை மிர்ச்சி விஜய் எழுதியுள்ளார். சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து படத்தை வெளியிடுவதற்கான போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

பா. மகிழ்மதி

vels
You might also like