இந்தியாவிலேயே தமிழில் தான் முதல் நூல் அச்சாகியிருக்கிறது. அதன் பெயர் -தம்பிரான் வணக்கம்.
போர்த்துக்கீசிய மொழியில் செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியர் எழுதிய நூலைத் தமிழாக்கம் செய்தவர் அண்டிறிக்கி பாதிரியார். நூல் அச்சாகிய நாள் 20.10.1598.
இதன் படிகள் ரோமிலும், விஸ்பனிலும் உள்ளன.
கிறித்துவ மதத்தைப்பரப்பும் நோக்கத்தில் முதலில் தமிழை நவீனத் தொழில் நுட்பத்திற்கு அழைத்துச் சென்ற அண்டிறிக்கி பாதிரியார் எண்பதாம் வயதில் இங்குள்ள புன்னக்காயலில் உயிர்நீத்தார்.
முதலில் தமிழ் அச்சுக்கூடத்தை நிறுவியதும் இவர் தான்.
பதினாறாம் நூற்றாண்டில் தமிழ் அச்சைச் சாத்தியப்படுத்திய அண்டிறுக்கி தம்பிரான் வணக்கத்தை அடுத்து, கிரிசித்தியானி, கொம்பேசியோனாயரு, அடியார் வரலாறு என்று மூன்று நூல்களை அச்சில் ஏற்றினார்.
மக்கள் மொழி நடையில் வெளியான முதல் நூல் சீனத்திலிருந்து வரவழைக்கப்பட்டதாளில் அச்சிடப்பட்டிருந்தது.
அந்த நூலிலிருந்த வரிகளில் சில :
“உன் தந்தையையும், தாயையும்
மதித்து நட
கொலை செய்யாதே
விபசாரம் செய்யதே
களவு செய்யாதே
பிறருக்கு எதிராகப்
பொய்ச் சான்று சொல்லாதே …”
இந்தியாவில் கோவாவை அடுத்து கொல்லத்தில் அச்சுக்கூடம் அமைக்கப்பட்ட ஆண்டு 1557.
#
தமிழ் நாடன் பதிப்பித்து வெளியிட்ட ‘தமிழ் மொழியின் முதல் அச்சுப்புத்தகம்’ – என்ற நூலிலிருந்து.