அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம்!

– கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது தொடர்பாக தமிழகம் முழுக்க உள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றக் கூட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், “இந்தப் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் மாதம் ஒருமுறை ஒரு கூட்டம் நடத்தப்படும்.

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பியதோடு வேலை முடிந்துவிட்டது என்று இருந்துவிடாமல் குழந்தைகளின் கல்வி எப்படி உள்ளது? பள்ளி எப்படி உள்ளது போன்றவற்றை அவர்களுக்கு தெரியப்படுத்துவதே இந்தக் கூட்டத்தின் முதன்மை நோக்கம்” என்றார்.

அதோடு, இந்தாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கல்வித்துறைக்காக ரூ.36,895.89 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அமைச்சர், அரசுப் பள்ளியில் சேர்ப்பது வறுமையின் அடையாளம் அல்ல என்றும், அது பெருமையின் அடையாளம் என மாற்றிக் காட்டுவோம் என்றும் பேசினார்.

21.03.2022 12 : 30 P.M

You might also like