உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.
போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் லட்சக்கணக்கானோர் குவிந்திருக்கிறார்கள்.
உக்ரைனில் கடந்த 24-ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து இந்த 12 நாட்களில் 17 லட்சத்து 35 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அகதிகளுக்கான ஐ.நா.சபை உயரதிகாரி பிலிப்போ கிராண்டி தனது டுவிட்டரில், ”உக்ரைனில் இருந்து 12 நாட்களில் 17 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்” எனப் படுவிட்டுள்ளார்.
இதில் 5-ல் 3 பங்கு, அதாவது கிட்டத்தட்ட 10 லட்சத்து 30 ஆயிரம் பேர் போலந்து சென்றதாகவும், 1,80,000 பேர் ஹங்கேரிக்கும், 1,28,000 பேர் ஸ்லோவாக்கியாவுக்கும் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ருமேனியா உள்ளிட்ட நாடுகளிலும் உக்ரைன் அகதிகளின் வருகை கணிசமாக உள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு கூறியுள்ளது.
08.03.2022 12 : 30 P.M