விஜய் சேதுபதிக்கு கிடைத்த சிறப்பு கௌரவம்!

அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தது.

அதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது.

சமீபத்தில் நடிகை திரிஷா, நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலருக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்த நிலையில், தற்போது நடிகர் விஜய்சேதுபதிக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.

05.03.2022 12 : 30 P.M

You might also like