ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி.

அந்தப் படத்தில் இவருடைய காமெடி பெரிய அளவில் பேசப்படவே, தொடர்ந்து பெரிய படங்கள் அவரைத் தேடி வந்தன.

இவர் ஹீரோவாக நடித்த ‘எல்.கே.ஜி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைத்தொடர்ந்து ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்தார். இதில் கதைநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் கதாநாயகனாக ஆர்.ஜே.பாலாஜி நடிக்க இருக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்தை ஜியன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இவர், பிரதிவ்ராஜ் நடித்த மலையாள படமான ‘தியான்‘ (‘TIYAAN’ ) ஹிட் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் டார்க்-காமெடி-திரில்லர் படமாக உருவாகிறது. இதன் பூஜை இன்று எளிமையாக நடைபெற்றது. மார்ச் 23-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்தப் படத்தையும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளார்.

You might also like