இயக்குநராக அறிமுகமாகும் யுவன் சங்கர் ராஜா!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

யுவன் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது திரைத்துறை அனுபவம் குறித்து கலந்துரையாடிய யுவன்,

“நான் திரைத்துறையில் 25 ஆண்டுகள் கடந்தது பெரிய காரணம் ரசிகர்கள் தான். இசையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நான் அடுத்ததாக இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறேன்.

என்னுடைய ஒய்.எஸ்.ஆர் தயாரிப்பு நிறுவனம் மூலம், புதிய படத்தை இயக்க இருக்கிறேன். அந்தப் படத்தின் பணிகள் இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் தொடங்கும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாக்க இருக்கிறேன்” எனக் கூறினார்.

01.03.2022  12 : 30 P.M

You might also like