94 நாடுகளில் பேசப்படும் தமிழ் மொழி!

வங்காளதேசம் (அன்றைய கிழக்கு பாகிஸ்தான்) மக்கள் எங்கள் தாய் மொழியை (வங்க மொழியை) அங்கீகரிக்கவேண்டும் என்று ஒன்றுபட்ட பாகிஸ்தானாக இருந்தபோது தாய் மொழிக்காக தனது நாட்டினை எதிர்த்து போராடி தன் தாய்மொழியான வங்க மொழிக்காக உண்ணாவிரதத்தால் இன்னுயிர்களை இழந்தார்கள் பல மக்கள்.

இதன் நினைவாக யுனஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் பிப்ரவரி-21 ஆம் தேதி உலகத்
தாய்மொழி தினமாக கொண்டாட அறிவித்தது.

அதனடிப்படையில் ஆண்டுதோறும் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகில் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன. இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை. ஆனால், தமிழ் மொழியை 7 கோடி பேர் பேசுகின்றனர்.

உலகில் 94 நாடுகளில் தமிழ் பேசுபவர்கள் உள்ளனர். இந்தியா பல மொழிகள் பேசும் நாடு.

இதில் 74 சதவீத மக்கள் இந்திய, ஐரோப்பிய மொழிகளையும், 23 சதவீத மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழியையும் பேசுகின்றனர். இருப்பினும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மாதம் ஒரு தாய்மொழி அழிவதாகவும், அதனை தடுக்க இந்த தினம் கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

உலக நாடுகள் பலவற்றில் இன்று தமிழர்கள் குடியேறி, வாழ்ந்தும் பல சாதனைகள் புரிந்தும் வருகின்றனர்.

நாட்டின் உடன் பிறப்புகளோடு உறவாட இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளைக் கற்றாலும், நமது அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் தொலைக்காமல் இருக்க தாய் மொழியான தமிழில் கல்வி கற்று, தமிழர்களோடு தமிழில் உரையாடி தாய் மொழியை வளர்ப்போம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

21.02.2022  10 : 50 A.M

You might also like