இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இடைக்கால தடை!

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த பாடல்களை அவர் கூறிய ஒப்பந்தத்தை மீறி நான்கு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எக்கோ, அஹி, யுனிசிஸ், கிரி டிரேடிங் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்தலாம் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (பிப்ரவரி-18) விசாரணைக்கு வந்தபோது, “தனி நீதிபதி அளித்த தீர்ப்பால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், என்னிடம் காப்புரிமை பெறாமல் தன்னுடைய பாடல்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இப்பாடலை படத்தில் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், இதர இணையதளங்களில், பயன்படுத்துவது தவறு என்றும், இது எனக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதாகவும்” இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் எக்கோ, அஹி உள்ளிட்ட நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

18.02.2022  5 : 30 P.M

You might also like