பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள்!

– ஐ.நா சபையில் இந்தியா புகார்

ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையில், பயங்கரவாத தடுப்புக்குழுக் கூட்டம்  நடைபெற்றது.

இதில் பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹார்,

“கடந்த 2008-ல், மும்பை பயங்கரவாதத் தாக்குதல்; 2016-ல், பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல்; 2019-ல், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் என பல பயங்கரவாத சம்பவங்களை உலகம் பார்த்துள்ளது.

இவற்றில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அதேநேரத்தில், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.

இந்த பயங்கரவாதிகள், எங்கிருந்து வந்தவர்கள் என்பதை, நாம் அனைவரும் அறிவோம். அந்த குறிப்பிட்ட நாடு, அவர்களுக்கு முழு ஆதரவு அளித்து வருகிறது. அந்த பயங்கரவாதிகளை, தியாகிகள் என அந்நாட்டுத் தலைவர்கள் போற்றுகின்றனர்.

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் அந்த நாட்டிற்கு, உலக நாடுகள் அழுத்தம் தர வேண்டும். பயங்கரவாதத் தாக்குதல்களை அரங்கேற்றியவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் இந்தியா உறுதியாக உள்ளது” எனக் கூறினார்.

16.02.2022  5 : 30 P.M

You might also like