தமிழில் முதல்முறையாக ஒரு புதுமைப் புத்தகம்!

விளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரியின் இதுவரையிலான விளம்பரப் படவுலக அனுபவங்களின் தொகுப்பாக முகிழ்த்திருக்கிறது டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடான ‘விளம்பரப் படம் வேற லெவல்’ என்ற புத்தகம்.

இதுபற்றி அவர்களின் அறிமுகம்…

500க்கும் அதிகமான விளம்பரங்கள் செய்தாகிவிட்டது. மீடியாவில் பல பக்கங்களிலும் 30 ஆண்டுகள் உழைத்தாகிவிட்டது.

கவிதை, சிறுகதை, தொலைக்காட்சித் தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள், அனிமேஷன் படங்கள், Event management மற்றும் விளம்பரப் படங்கள் என நீண்ட பயணம்.

இதில், 52 விளம்பரப் படங்கள், அவை உருவான விதம் மற்றும் தொழில்நுட்பம் பற்றி பகிர்ந்திருக்கிறோம்.

கவிப்பேரரசு வைரமுத்து முன்னுரை எழுத, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் மற்றும் லயோலா கல்லூரி ஊடகத்துறைத் தலைவர் சுரேஷ்பால் அணிந்துரை வழங்கியுள்ளனர்.

மீடியாவில் பயணிப்பவர்களுக்கும் மீடியா நோக்கிவரும் மாணவர்களுக்கும் இதுவொரு மிகப் பயனுள்ள நூல்.

அதோடு வெற்றிபெற்ற தொழிலதிபர்கள் பற்றியும், தங்களது நிறுவனத்தை விளம்பரப்படுத்த விரும்பும் புதிய தொழில்முனைவோருக்கு விளம்பரங்களின் வீச்சைப் பற்றியும் புத்தகம் அறிமுகப்படுத்துகிறது.

ஒவ்வொரு விளம்பரத்தைப் பற்றிய விளக்கத்தோடு, அதன் QR code கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் மொபைலில் ஸ்கேன் செய்து உடனே அந்த விளம்பரத்தைப் பார்க்க முடியும்.

அந்த வகையில் தமிழின் முதல் முயற்சி என்றும் சொல்லலாம் என்கிறார்கள் மகிழ்ச்சியாக.

பா.மகிழ்மதி

12.02.2022 10 : 50 A.M

You might also like