தமிழக அரசு ஒப்புக்கொண்டால் தான் மேகதாது திட்டத்திற்கு அனுமதி!

– மத்திய அரசு திட்டவட்டம்

காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்ட பிறகே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி தரப்பட்டுவிட்டதா என்றும், அப்படி இல்லையேல் அதற்கான காரணங்களை குறிப்பிட வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் கர்நாடக எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா கேள்வி எழுப்பினார்.

அதற்கு எழுத்து மூலமாக பதிலளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, “கர்நாடகாவின் பரிந்துரையை மத்திய அமைச்சகம் அமைத்த மதிப்பீட்டு நிபுணர் குழு பரிசீலித்ததாகவும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கர்நாடகாவுக்கு தமிழகத்துடன் சுமுக நிலை ஏற்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம்” என்றும் கருத்து தெரிவித்திருப்பதாகக் கூறினார்.

You might also like