அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் 2022, பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வருவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதையொட்டி ‘வலிமை’ படம் சென்சாரகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. படம் 178 (2:58 மணி) நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, வலிமை படத்தைப் பார்த்த போனி கபூரின் நண்பரும், பாலிவுட்டின் சினிமா பிரமுகரும், முன்னாள் சென்சார் போர்டு ஆலோசகருமான ராஜேஷ் வாசனி படம் பற்றி முகநூலில் மிரட்டலான விமர்சனம் செய்துள்ளார்.
அதில், “ஜீ ஸ்டுடியோவின் பான் இந்தியா குழுவுடன் நாங்கள் படத்தைப் பார்த்தோம். படத்தைப் பார்த்து மிரண்டு விட்டோம். ஃபாஸ்ட் & ஃபியூரியஸ், மிஷன் இம்பாசிபிள் படங்களுக்கு இந்திய சினிமாவின் பதில் தான் வலிமை, வெள்ளித் திரைகளை வலிமை படம் எரிய வைக்க போகிறது.
ஷோமேன் போனி கபூரின் த்ரில்லர் உங்கள் மூச்சை இழுக்கும். புஷ்பா படம் ஆரம்பம் என்றால், வலிமை க்ளைமாக்ஸாக இருக்கும். பிப்ரவரி 24, 2022 முதல் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தமிழ் – தெலுங்கு – கன்னடம் – இந்தி…!!!” என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான சுனில் வத்வா டிவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “வலிமை படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி அடையும் என்றும், சீட் நுனிக்கு ரசிகர்களை கொண்டு செல்லும் த்ரில்லர் படம் என்றும், வலிமை படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வர வேண்டும் என்றும் டிவீட் செய்துள்ளார்.
இதனை வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் ரீ டிவீட் செய்துள்ளார்.
இதன் மூலம் வலிமை படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
07.02.2022 12 : 30 P.M