– பத்திரிகையாளராக ஆதித்தனாரின் அனுபவம்.
பாரிஸ்டர் படிப்புக்காக லண்டனில் இருந்தபோது கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படித்தால் அதிகச் செலவாகும் என்று ஒரு ஆங்கிலேயர் குடும்பத்தினருடன் ‘பேயிங் கெஸ்ட்’டாக தங்கியிருந்தேன்.
பத்திரிகைத் துறை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக ‘தமிழ்நாடு’ பத்திரிகைக்கு செய்திகள் அனுப்பிக் கொண்டிருப்பேன்.
அந்த நேரத்தில்தான் லண்டனில் ‘வட்டமேசை மாநாடு’ நடந்தது. அந்த மாநாட்டில் காந்திஜியைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
அவர் அருகில் சென்று அவள் காதருகே குனிந்து, “மாநாடு நடந்து கொண்டிருந்தபோது இடையில் எழுந்து சென்றீர்களே, எங்கே போனீர்கள்!” என்று கேட்டேன்.
அவர் சிரித்துக்கொண்டே, “ஒரு பல் ஆடிக்கொண்டு இருந்தது. அதைப் பிடுங்கிப் போடச் சென்றேன்” என்று சொல்லிவிட்டு என் முதுகைத் தட்டினார்.
உடனே ‘தமிழ்நாடு’ தினசரிக்கு நான் அனுப்பிய செய்தியின் தலைப்பு- ‘காந்திஜியின் பல் விழுந்தது’!
– சாவி (29.09.1985)